ஐரோப்பா நோக்கிச் சென்ற கப்பல் அவசரமாக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது
ஐரோப்பா நோக்கி பயணித்த தலாசா பெட்ரஸ் என்ற சிங்கப்பூர் கப்பலொன்று அவசரமாக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
சுத்திகரிப்பு பொருட்களைத் தயாரிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் மூலப்பொருள் அடங்கிய கொள்கலனில் கசிவு ஏற்பட்டதன் காரணமாக குறித்த கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு வந்துள்ளது.
சிங்கப்பூரிலிருந்து கடந்த 25ஆம் திகதி பயணத்தை இந்த கப்பல் இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
சேதமடைந்த கொள்கலனை அகற்றி அதைச் சரிசெய்த பின்னர் கப்பல் மீண்டும் துறைமுகத்தை விட்டு வெளியேறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கப்பல் சிங்கப்பூரிலிருந்து புறப்பட்டுச் சுயெஸ் கால்வாய் வழியாகப் பல ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று பின்னர் கொழும்பு துறைமுகத்திற்கு வரத் திட்டமிடப்பட்டிருந்ததாக குறிப்பிடப்படுகின்றது.