யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் ஆரம்பித்த சுழற்சி முறையிலான உணவுத் தவிர்ப்பு போராட்டம் இரண்டாவது நாளாக முன்னெடுப்பு
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் ஆரம்பித்துள்ள சுழற்சி முறையிலான உணவுத் தவிர்ப்புப் போராட்டம் இரண்டாவது நாளாகவும் இன்று தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதன் ஊடாக இலங்கை அரசாங்கத்தின் போர்க்குற்றங்கள், மனித நேயத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் தமிழ் இனத்திற்கு எதிராக இனவழிப்பு என்பவற்றிக்கு சர்வதேச நீதி வேண்டும், தமிழ் இனத்தின் மீதான இனவழிப்பு தொடராது இருப்பதற்கு தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளான மரபுவழித் தாயகம், சுயநிர்ணய உரிமை, தமிழ்த் தேசியம் என்பன அங்கீகரிக்கப்பட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்ட வருகிறது.
பல்கலைக்கழக மாணவர்கள் இருவருடன் இணைந்து, வேலன் சுவாமிகள், அருட்தந்தையர்கள் இருவர் என ஐந்து பேர் நேற்று காலை இந்தப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.
இதனையடுத்து தொடர்ச்சியாக பலரும் குறித்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் இணைந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
https://fb.watch/3_eKF7MSpi/
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 1 மணி நேரம் முன்
பாக்கியராஜ் மறைவு... தனது ஆயுளில் 10 ஆண்டுகளை கொடுக்க ஆசைப்பட்ட சாந்தனு! கலங்க வைக்கும் காணொளி Manithan
முருகன் பிறந்த இடம் வடநாடா? கொந்தளித்த தமிழ் மக்கள்.. ஜூனியர் என்.டி.ஆர் படத்திற்கு எதிர்ப்பு.. Cineulagam
'காதல் சொல்ல வந்தேன்' நடிகரின் தற்போதைய நிலை... வெளிநாட்டில் என்ன வேலை செய்றார்னு தெரியுமா? Manithan