மன்னாரில் கவனிப்பாரற்று கிடக்கும் பாடசாலை: கவலை வெளியிடும் சமூக ஆர்வலர்கள்
மன்னார் வலயக்கல்வி பணிமணைக்குட்பட்ட பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் உள்ள பாடசாலையின் தற்போதைய நிலை தொடர்பில் சமூக ஆர்வளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
மன்னார் 9ம் கட்டை உயிலங்குளம் வண்ணாமோட்டை பகுதியில் அமைந்துள்ள பாடசாலை தொடர்பிலே குறித்த கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.
மன்னார் வவுனியா வீதியில் அமைந்துள்ள குறித்த பாடசாலை கைவிடப்பட்ட நிலையில் அப்பாடசாலையில் உள்ள தளபாடங்கள் களவாடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
உரிய நடவடிக்கை
மேலும், பாடசாலை வளாகத்தில் பிள்ளையார் ஆலயமும் உள்ளதாகவும் அதுவும் கவனிப்பார் இன்றி காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நேற்று மக்கள் ஒன்றினைந்து குறித்த பாடசாலையை சுற்றி துப்பரவு பணிகளை முன்னெடுத்ததுடன், இது தொடர்பில் பொருப்புவாய்ந்தவர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழ்நாடு தனது பண்பாட்டை இழக்கிறதா! 18 மணி நேரம் முன்

புதிய சீரியல் நடிக்கும் மகாநதி சீரியல் நடிகர் சுவாமிநாதன், அட நாயகி இவர் தானா... புதிய ஜோடி, புரொமோ இதோ Cineulagam
