திருகோணமலையில் காட்டு யானைகளின் அட்டகாசம்
திருகோணமலை - மாவட்டத்தின் வான்எல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் காட்டு யானைகள் வீடொன்றினை உடைத்து சேதப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவமானது திருகோணமலை - ஜயந்திபுர பகுதியில் இன்று (27.05.2023) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
இந்த விடயம் தொடர்பாக வனஜீவராசி அதிகாரிகளுக்கும், பொலிஸாக்கும் முறையிட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் வீட்டில் உள்ளோருக்கு எவ்வித உயிர் சேதங்கள் ஏற்படாத போதிலும் வீட்டின் ஒரு பகுதியை உடைத்து சேதப்படுத்தியுள்ளது.
மக்கள் முறைப்பாடு
அண்மைக் காலமாக ஜயந்திபுர பகுதியில் யானைகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் வீட்டிலுள்ள உணவு பாத்திரங்களை காட்டு யானை தூக்கி வீசியுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் அமைக்கப்பட்டிருக்கும் வேலிகளை உடைத்துக்கொண்டு யானைகள் கிராமத்திற்குள் புகுவதாகவும் தெரிவிக்கின்றனர்.
மேலும் இப்பகுதியில் தொடர்ந்து யானைகளினால் உயிர்சேதங்களும் ஏற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

சீன போர்விமானங்களை பயன்படுத்தி பாகிஸ்தான் இந்தியாவின் ரஃபேல் ஜெட்களை வீழ்த்தியது: அமெரிக்க வட்டாரம் உறுதி News Lankasri

சீன தயாரிப்பு விமானத்தால் பாகிஸ்தான் சுட்டு வீழ்த்திய 2 இந்திய விமானங்கள்: அமெரிக்க நிபுணர்கள் உறுதி News Lankasri
