ஹட்டன் - புரடொக் தோட்டத்திற்கு செல்லும் வீதியின் நிலை: தொடரும் அதிகாரிகளின் பாராமுகம்
ஹட்டனில் இருந்து எபோட்சிலி ஊடாக புரடொக் தோட்டத்திற்கு செல்லும் பிரதான வீதியானது மழைகாலத்தில் சேறு நிறைந்த நிலையில் காணப்படுவதால் அப்பிரதேச மக்கள் பெரும் அசெளகரியங்களை சந்தித்துள்ளனர்.
இப்பிரதேசத்தில் சுமார் 70ற்கும் அதிகமான மாணவர்கள் 3.5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பாடசாலைக்கு இவ்வீதியை பயன்படுத்தி வருவதால் பெரும் பாதிப்பினை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், புரொடக் தோட்டத்தில் வசிப்பவர்கள் அவசர நிலைகளின் போது நான்கு கிலோமீட்டர் தூரம் நடந்து சென்றே வாகனங்த்தில் பயணம் செய்ய வேண்டிய நிலை காணப்படுவதோடு, பாதை சீர்குலைந்து காணப்படுவதால் பிரதான நகரிலுள்ள வாகன சாரதிகள் இப்பாதையில் வருவதற்கு விருப்பம் தெரிவிப்பது இல்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
இக்கட்டான சூழ்நிலை
இக்கட்டான சூழ்நிலையில் இவ்வீதியை வாகன சாரதிகள் பயன்படுத்தினாலும் அதிகளவான கட்டணம் செலுத்த வேண்டிய அவல நிலைக்கும் பிரதேச மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
கடந்த காலங்களில் ஒன்றிற்கு இரு முறை இப்பாதை புனரமைப்பதற்காக அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பல முறைப்பாடுகள் செய்தும் இதற்கான தீர்வு இதுவரை எதுவும் இல்லை. பொறுப்புடைய அதிகாரிகளுக்கு மாணவர்கள், பிரதேசவாசிகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுத்து தர கூறி கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |