வங்கி முறைமை விரைவில் வீழ்ச்சியடையும் அபாயம் - பேராசிரியர் நிஹால் ஹென்நாயக்க
வங்கி முறைமை விரைவில் வீழ்ச்சியடையும் அபாயம் இருப்பதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ மற்றும் நிதி பீடத்தின் பேராசிரியர் நிஹால் ஹென்நாயக்க தெரிவித்துள்ளார்.
இணைய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து தெரிவித்துள்ள அவர்,
தவறான பொருளாதார முகாமைத்துவமே பிரதான காரணம் என சுட்டிக்காட்டிய பேராசிரியர், இந்நாட்டில் வங்கிகள் ஊடாக பெற்ற கடன்களை பல வங்குரோத்து அரச நிறுவனங்கள் செலுத்தத் தவறியதன் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் வலியுறுத்துகின்றார்.
நாட்டிற்கு அதிக பொறுப்புகள் இருக்கின்றன
இந்த நாட்டில் கல்விக்காக 2021ம் ஆண்டு அரசாங்கம் சுமார் 200 பில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய பேராசிரியர், அந்த ஆண்டில் ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு மாத்திரம் ஒரு பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
சட்டப்பூர்வமாக்கப்பட்ட பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இவ்வருடம் இதுவரையில் செலுத்திய நட்டம் 700 பில்லியனை அண்மித்துள்ளதாக அவர் வெளிப்படுத்தியமை விசேடமானது.
இவ்வாறான சூழலில், சர்வதேச நாணய நிதியத்தின் மீது முழு நம்பிக்கை வைப்பதை விட, நாட்டிற்கு அதிக பொறுப்புகள் இருப்பதாகவும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
மாணவர்கள் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை
அரச பல்கலைக்கழகங்கள் வழங்கும் இலவசக் கல்வியின் பெறுமதியை அவற்றில் கல்வி கற்கும் மாணவர்கள் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்றும் பேராசிரியர் நிஹால் ஹென்நாயக்க வலியுறுத்தினார்.
சர்வதேச நாணய நிதியம் தொடர்பில் கருத்து தெரிவித்த பேராசிரியர், சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 4 பில்லியன் டொலர்களை பெற்றுக்கொள்வதில் கவனம் செலுத்துவதற்கு பதிலாக அதிக கவனம் செலுத்த வேண்டிய பல பகுதிகள் பற்றியும் வெளிப்படுத்தியுள்ளார்.
பொறுப்பற்ற முதலீடுகளால் நாட்டிற்கு சுமையாக மாறியுள்ள ஹம்பாந்தோட்டை மாநாட்டு மண்டபம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள வளங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளக்கூடிய விசேட முதலீடுகள் தொடர்பிலும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.