ஒமிக்ரோன் திரிபின் ஆபத்து மிக அதிகமாக உள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
உலகில் பரவிவரும் ஒமிக்ரோன் திரிபின் ஆபத்து மிக அதிகமாக உள்ளதாக உலக சுகாதார அமைப்பு இன்று புதிய எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இன்றும் நாளை மறுதினம் இரவு புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஈடுபட மக்கள் தயாரான நிலையில் இந்த எச்சரிக்கை வந்துள்ளது.
ஒமிக்ரோன் மாறுபாடு இரண்டு முதல் மூன்று நாட்களில் இரட்டிப்பு விகிதத்துடன் வீரியமாக பரவுவதாக அறிக்கையிட்டுள்ள உலக சுகாதார அமைப்பு அதற்கு ஆதாரமாக அமெரிக்கா, பிரான்ஸ், பிரித்தானியா ஆகிய நாடுகளில் நேற்று பதிவான புதிய அதியுச்ச தொற்றுக்களை சுட்டிக்காட்டியுள்ளது.
உலகில் கொரோனா தொற்று உருவான பின்னர் அதிக எண்ணிக்கையிலான தொற்றுக்களை உருவாக்கிவரும் ஒமிக்ரோன் திரபு அன்டிஜனிக் எனப்படும் தொற்று சோதனைகளில் அதிகம் வெளிப்படாத ஒரு திரிபாக கருதப்படுகிறது.
இதனால் சில நிமிடங்களில் முடிவை வழங்கும் நன்மையைக் கொண்டுள்ள தொற்றுசோதனை, ஒமிக்ரோன் திரிபில் குறைவான உணர்திறன் கொண்டவையென அமெரிக்க சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
நேற்று ஐரோப்பிய ரீதியில் பிரான்ஸ், பிரித்தானியா, போர்ச்சுகல் மற்றும் கிரேக்கம் ஆகிய நாடுகளில் புதிய அதியுச்ச தினசரி தொற்றுகள் பதிவுகளை பதிவு செய்யப்பட்டுள்ளன பிரான்சில், கடந்த 24 மணி நேரத்தில் கிட்டத்தட்ட 180,000 வழக்குகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
புத்தாண்டுக்கு பின்னர் இது 250,000 ஐ கடந்த தினசரி தொற்றாக உயரும் என பிரெஞ்சு சுகாதார அமைச்சர் ஒலிவியே வேரன் எச்சரித்துள்ளார். கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட பிரித்தானியாவிலும் நேற்று கிட்டத்தட்ட 130,000 தொற்றுகள் பதிவாகியுள்ளன.
சுவிட்சர்லாந்து மற்றும் நெதர்லாந்திலும் ஆதிக்கம் செலுத்தும் திரிபாக ஒமிக்ரோன் மாறியுள்ளது.
சுவிட்சர்லாந்தில் 55 வீத தொற்றுகள் ஒமிக்ரோன் பதிவு பெற்றுள்ளன. அமெரிக்காவின் தினசரி தொற்று 4 லட்சத்து 40,000 ஐ கடந்தது.
பிரான்சில் கடந்த 24 மணி நேரத்தில் 242 பேர் கொரோனா தாக்கத்தால் பலியாகினர். கொரோனா எழுச்சியை எதிர்கொண்டுள்ளதால், வீட்டில் இருந்து பணிபுரியும் நடைமுறை செயல்படுத்தத் தயங்கும் நிறுவனங்களுக்கு அபராதங்களை விதிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
அத்துடன் ஜனவரியில் பாடசாலைகள் ஆரம்பிக்கும் நிலையில் வாரத்தில் 3 முதல் 4 நாட்களுக்கு இணையவழிகல்வி கட்டாயமாக இருக்கும் அத்துடன் மாணவர்கள் பாடசாலைகளுக்கு திரும்புவதற்கு முன்னர் இரண்டு அல்லது மூன்று தொற்று சோதனைகளை செயயவேண்டும் எனற முடிவும் வரவுள்ளது.
இதற்காக தொற்று பரிசோதனை கருவிகள் விரைவில் பல்பொருள் அங்காடிகளுக்கும் தற்காலிகமாக விற்பனைக்கு வரும். இதேபோல தடுப்பூசி போடாத வெளிநாட்டுப் பயணிகள் பின்லாந்திற்குள் நுழைய முடியாத வகையில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஜேர்மனியில் கடந்த 21 திகதியன்று அறிவிக்கப்பட்ட கொரோனா கட்டுப்பாடுகள் நேற்று 28 ஆந்திகதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
இதன் அடிப்படையில் தடுப்பூசி போடப்பட்டவர்களாக இருந்தாலும் கூட, புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அதிகபட்சமாக பத்து விருந்தினர்கள் மட்டுமே அனுதிக்கப்படுவார்கள்.
திடீரென ஜனனியை தள்ளி அடிக்க சென்ற கதிர்... பரபரப்பான எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam