இலங்கையை குறிவைத்த ஐ. நா: அழுத்தத்தின் உச்சமான உயிர்த்த ஞாயிறு விவகாரம்(Video)
ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கை தொடர்பாக முன்வைக்கப்பட்ட அறிக்கையானது மிகவும் காத்திரமான ஒன்று என பிரித்தானிய இராணுவ ஆய்வாளர் கலாநிதி அரூஸ் தெரிவித்தார்.
லங்காசிறி ஊடகத்தின் ஊடறுப்பு சிறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
“உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பு தாக்குதல் தொடர்பாக வெளியான காணொளியும் ஐக்கிய நாடுகள் சபையின் 54வது மனித உரிமைப்பேரவையின் கூட்டத்தொடரும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலை மையமாக கொண்டே அமைந்துள்ளது.
அதேவேளை இம்முறை ஐ.நா வெளியிட்ட அறிக்கையானது வழமையை விட முற்றிலும் வேறுப்பட்டுள்ளது” எனவும் சுட்டிக்காட்டினார்.
இவ்வாறு இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் அதனை மையப்படுத்திய ஐ.நாவின் அழுத்தங்கள் தொடர்பிலான பல தகவல்களை அலசி ஆராய்கிறது இன்றைய ஊடறுப்பு...
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |