வியத்மக அமைப்பிற்கு சந்தர்ப்பம் வழங்காமையே நாட்டின் இந்த நிலைக்கு காரணம்?
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவை ஆட்சி பீடம் ஏற்றுவதில் முக்கிய பங்களிப்பினை வழங்கிய வியத் மக அமைப்பிற்கு நாடாளுமன்றில் உரிய சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
நாட்டின் நெருக்கடி நிலைமைகளுக்கு வியத் மக மீது குற்றம் சுமத்தப்பட்ட போதிலும் உண்மையில் அவ்வாறான ஓர் நிலைமை கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வியத்மக அமைப்பினைச் சேர்ந்தவரும் ராஜாங்க அமைச்சருமான நாலக கொடஹேவா இதனைத் தெரிவித்துள்ளார்.
தொம்பே பிரதேசத்தில் அண்மையில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
தற்பொழுது எந்தவிடயத்திற்கும் வியத்மக மீது குற்றம் சுமத்தப்படுகின்றது. டை கோர்ட் அணிந்த அனைவரும் வியத்மக அமைப்பினைச் சார்ந்தவர்கள் கிடையாது.
வியத் மக அமைப்பின் சார்பில் தேர்தலில் போட்டியிடுவதற்கு 9 பேருக்கே வேட்பு மனு வழங்கப்பட்டது, இதில் 8 பேர் வெற்றியீட்டினர்.
50 பேருக்கு சந்தர்ப்பம் வழங்கியிருந்தால் அதில் 45 பேர் வெற்றியீட்டியிருப்பார்கள். தேர்தலில் வெற்றியீட்டிய 8 பேரில் எவரும் அமைச்சரவையில் அங்கம் வகிக்கவில்லை.
இந்த சந்தர்ப்பத்தை வியத் மகவிற்கு வழங்கியிருந்தால் சில வேளைகளில் மாற்றம் ஒன்றை செய்து காட்டியிருக்கலாம் என நாலக கொடஹேவா தெரிவித்துள்ளார்.
ஸ்பெயினில் இருந்து மொராக்கோவிற்கு திரும்பிய 37,500 அகதிகள்: பலி எண்ணிக்கை 57 ஆக அதிகரிப்பு News Lankasri