பெண் மாடியில் இருந்து குதித்தமைக்கான காரணம் வெளியாகியுள்ளது
சட்ட ரீதியாக திருமணம் செய்யாத மனைவிக்கு கடும் சித்திவதைகளை செய்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள அரச நிறுவனம் ஒன்றில் உதவிப்பணிப்பாளராக தொழில் புரியும் நபரை எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கம்பஹா பதில் நீதவான் வசந்தா குணசேகர இன்று உத்தரவிட்டுள்ளார்.
சமிந்த குருப்பு நாணயக்கார என்ற நபரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்ப்டுள்ளார்.
சட்ட ரீதியாக திருமணம் செய்துக்கொண்ட தம்பதியினர் அல்ல
கம்பஹா பிரதேசத்தில் வீடொன்றில் மேல் மாடியில் இருந்து குதித்த நிலையில் காயமடைந்த 40 வயதான பெண் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த பெண் கொழும்பில் உள்ள நிறுவனம் ஒன்றில் உயர் பதவியை வகித்து வருவதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. சந்தேக நபரும், காயமடைந்த பெண் சட்ட ரீதியாக மணம் செய்துக்கொண்ட தம்பதியினர் அல்ல என்பது ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பெண்ணை அயன் பெட்டியால் சுட்ட சந்தேக நபர்
சந்தேக நபருக்கும் காயமடைந்த பெண்ணுக்கும் இடையில் ஏற்பட்ட சண்டையின் போது, சந்தேக நபர் துணிகளை அயன் செய்யும் அயன் பெட்டியால் சுட்டு, சித்திரவதை செய்த போது, பெண் உயிர் தப்புவதற்காக வீட்டின் மேல் மாடியில் இருந்து கீழே குதித்துள்ளதாக கூறப்படுகிறது.
எனினும் பெண் மேல் மாடியில் இருந்து குதித்தாரா அல்லது சந்தேக நபர் தள்ளி விட்டாரா என்பது குறித்து விசாரணை நடத்துவதாக பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்த பெண் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதால், அவரிடம் இதுவரை வாக்குமூலம் பெறவில்லை எனவும் பொலிஸார் நீதிமன்றத்திடம் கூறியுள்ளனர்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 12 மணி நேரம் முன்

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri
