உயர்தர பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு இடையூறாக மாறியுள்ள ஆளும் கட்சி
நாடளாவிய ரீதியில் நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பேரணியின் முதலாவது பேரணி இன்று பிற்பகல் 2 மணிக்கு அனுராதபுரம் சல்காது மைதானத்தில் நடைபெறவுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பொதுஜன பெரமுனவின் ஏனைய தலைவர்களின் பங்குபற்றுதலுடன் இந்த பொது மக்கள் பேரணி நடைபெறவுள்ளது.
நாட்டின் அபிவிருத்தி செயற்பாடுகள் தொடர்பில் பொதுமக்களுக்கு தெளிவுபடுத்துவதே இதன் நோக்கமாக இருந்தாலும் இந்தப் பேரணியானது க.பொ.த உயர்தரப் பரீட்சை எழுதவுள்ள 3000 இற்கும் அதிகமான மாணவர்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதாக பிரதேசவாசிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
அநுராதபுரம் சல்காது மைதானத்தை சுற்றி 7 பரீட்சை நிலையங்கள் உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், பரீட்சை அட்டவணைக்கமைய, இன்று பிற்பகல் 3 மணியுடன் பரீட்சை நிறைவடையவுள்ளதுடன், இந்த பேரணி பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.