பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணி சிங்கள மக்களுக்கு எதிரானதல்ல! - சுமந்திரன்
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான நடைபவனி சிங்கள மக்களுக்கு எதிரானதல்ல என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
திருகோணமலை சிவன் கோவில் முன்றலில் இன்று காலை பேரணி ஆரம்பித்த போது, அதில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
இந்த அரசாங்கத்தின் சிறுபான்மை மக்களுக்கு எதிரான நடவடிக்கையை கண்டித்தும் சிறுபான்மை மக்களின் உரிமைகளை பெற்றுக்கொள்வதற்குமே, இந்தப் பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான நடைபவனி நடைபெறுகின்றது. இது சிங்கள மக்களுக்கு எதிரானதாக இல்லை.
பத்து கோரிக்கைகளை முன்வைத்து இந்த பவனி நடைபெறுவதுடன் வடக்கு கிழக்கின் தெற்கு முனையில் இருந்து வட முனையை நோக்கி இந்த பயணம் தொடர்கின்றது.
இந்த பேரணியை நிறுத்துவதற்கு அரசாங்கம் பல வழிகளில் முயற்சி செய்தது. எனினும் பொத்துவிலில் இருந்து இதுவரை எங்களது பயணத்தை தொடர்ந்து வந்திருக்கின்றோம்.
இந்நாட்டில், சிங்கள பௌத்த மக்களுக்கு இருக்கும் சகல உரிமைகளும் தமிழ் பேசும் மக்களாகிய எங்களுக்கும் உண்டு. ஏனெனில் நாங்களும் இந்நாட்டின் குடிமக்கள் என்றாலும் நேற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சுதந்திரதின நிகழ்வில் பேசும்போது, நான் சிங்கள பௌத்தன் என்று தெரிவித்தார்.
எனினும், அது எங்களுக்கு பிரச்சினை இல்லை. ஆயினும் இந்நாட்டின் ஜனாதிபதி நான் சிங்கள மக்களுக்கு மாத்திரம் சேவையாற்றுவேன் என்று தெரிவிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. எங்களுக்கும் இந்நாடு சொந்தமானது.
நாங்களும் வசிக்கின்றோம். அதபோல், சிங்கள மக்களும் இந்நாட்டில் வசிப்பதற்கான உரிமை உள்ளது. எங்களின் உரிமைகளை அகற்றமுடியாது. இதன் அடிப்படையில், நாங்கள் இந்த நடைபவனியை மேற்கொள்கின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.
பிரித்தானியாவில் ஆண்டுக்கு 1 மில்லியன் பவுண்டுகள் சம்பாதிக்கும் ஒருவர் எவ்வளவு வரி செலுத்த வேண்டும்? News Lankasri
மன்னிப்பு கேட்ட குணசேகரன்.. அதிர்ச்சியில் ஜனனி.. எதிர்நீச்சல் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
வானதியை திருமணம் செய்துகொள்ள தயங்கும் பாண்டியன்.. நிலா தான் காரணமா.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam