நாட்டை புதிய வறுமை நிலைக்கு இட்டுச் சென்ற ராஜபக்சர்கள் - சஜித் குற்றச்சாட்டு
ராஜபக்சக்கள் இந்த நாட்டை புதிய வறுமை நிலைக்குத் தள்ளியுள்ளனர் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான மொட்டு கட்சி அரசாங்கம் நாட்டை புதிய வறுமை நிலைக்கு தள்ளியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக உயர்மட்டத்தில் இருந்தவர்கள் கூட தற்போது கீழே விழுந்து விட்டதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் மேரிகம தொகுதி கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
நாட்டுக்கு புதிய மாற்றுத் திட்டம் தேவை
இந்த அழுத்தத்தை தாங்க முடியாமல் நாட்டு மக்கள் வீதிக்கு இறங்கியதாகவும், அகிம்சை வழி போராட்டம் என்றால் என்ன என்று ராஜபக்சக்கள் வன்முறையில் பதிலடி கொடுத்ததாகவும் அவர் கூறினார்.
நாட்டுக்கு புதிய மாற்றுத் திட்டம் தேவை எனவும், பாரம்பரியத்தில் இருந்து விலகிய நாட்டிற்கு புதிய வேலைத்திட்டத்தையும் புதிய பாதையையும் காட்டும் மாற்றாக அது அமைய வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போதைய ஜனாதிபதி பானையின் கைதியாகிவிட்டதாகவும் அவர்களுடன் யாரேனும் இணைந்தால் எதிர்காலத்தில் காக்கையின் ஆட்சியில் இருந்து வேட்புமனுக்களை பெறவேண்டிய நிலை ஏற்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.