அரசாங்கத்தை ஆட்டிப்படைக்கும் கபுடா: சஜித் ஆதங்கம்
தற்போதைய அரசாங்கத்தில் அமைச்சுப் பதவி உள்ளிட்ட அனைத்தையும் தீர்மானிப்பது கபுடா தான் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விமர்சித்துள்ளார்.
அமைச்சு பதவிகளுக்கான நியமனம் குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வௌியிட்டுள்ள அவர், “அமைச்சு பதவிகளுக்கு யாரை நியமிக்க வேண்டும் என்று இன்றும் கூட கபுடா தான் பட்டியலை அனுப்புகின்றார்.
மீண்டும் ராஜபக்சக்கள் ஆட்சி
ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து பிரிந்து வழிதவறிச் சென்றவர்கள் எதிர்காலத்தில் பதவிகளைப் பெற்றுக் கொள்வதற்காக கபுடாவின் முன் மண்டியிடும் நிலை ஏற்படும்.
சுயாதீனமாக செயற்பட முடியாத ஜனாதிபதி
ராஜபக்ச கும்பலை மீண்டும் அதிகாரத்துக்குக் கொண்டுவருவதற்கான ஏற்பாடுகளை அவர் மிக சரியாக செய்து கொண்டிருக்கின்றார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மொட்டுக் கட்சியின் பணயக் கைதியாக சிக்கிக் கொண்டுள்ளார். அவரால் சுயாதீனமாக எதையும் செய்ய முடியாது”என தெரிவித்துள்ளார்.