ராஜபக்ச குடும்ப உறுப்பினரொருவருக்கு வழங்கப்படவுள்ள முக்கிய பதவி
தேசிய விலங்கியல் பூங்காவின் பணிப்பாளர் நாயகமாக ராஜபக்ச குடும்ப உறுப்பினர் ஒருவர் நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தேசிய விலங்கியல் பூங்காவின் பணிப்பாளர் நாயகம் இஷினி விக்ரமசிங்க தனது பதவியை இராஜினாமா செய்துள்ள நிலையில்,அந்த பதவிக்கு ஜனாதிபதி செயலக சமூக ஊடக முன்னாள் தலைவர் ஷர்மிளா ராஜபக்ச(Sharmila Rajapaksa)நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஷர்மிளா ராஜபக்ச ஜூன் 2020 இல் ஜனாதிபதியின் சமூக ஊடகத்தலைவராக பணியாற்றிய நிலையில்,பின்னர் அந்த பதவியினை அவர் ராஜினாமா செய்திருந்தார்.
இந்நிலையில், ஷர்மிளா ராஜபக்சவின் நியமனம் தொடர்பான கடிதம் அமைச்சரவை அனுமதிக்காக 18 ஆம் திகதி அனுப்பி வைக்கப்பட்ட நிலையில்,(19ம் , 20 ம் திகதி பொது விடுமுறை என்பதனால் நாளை (21 ம் திகதி) அமைச்சரவை அனுமதியளிக்கும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
ரீ-ரிலீஸில் கெத்து காட்டும் அஜித்தின் மங்காத்தா படம்... இதுவரை எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா? Cineulagam
பல வருடங்களுக்கு பிறகு சந்தித்துக்கொண்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிரபலங்கள்... யார் யார் பாருங்க Cineulagam