கஜேந்திரகுமார் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து வீதிக்கு இறங்கிய மகளிர் அமைப்பு (Video)
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் அவரது சகாக்கள் கைது செய்யப்பட்டு பொய் வழக்கு தொடரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு மகளிர் அமைப்புகளால் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டமானது இன்று (19.06.2023) வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச செயலகம் முன்பாக இடம்பெற்றுள்ளது.
தேசிய மீனவர் துடுப்பு இயக்கம்
இதன்போது, போராட்டக்காரர்கள் பொலிஸாரின் அராஜகம் ஒழிக, மருதங்கேணி பொலிஸாரே பொய் வழக்கு போடாதே, இந்த மண் எங்களின் சொந்த மண், மருதங்கேணி எங்கள் சொத்து, அபகரிக்காதே அபகரிக்காதே நிலங்களை அபகரிக்காதே, வடக்குக் கிழக்கு தமிழரின் தாயகம், உட்பட பல்வேறு கோஷங்களையும் எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதில் மகளிர் அமைப்புச் சேர்ந்த பலரும் கலந்து கொண்டதுடன் தேசிய மீனவர் துடுப்பு இயக்கத்தில் யாழ். மாவட்ட மற்றும் நினைவு இழப்பு இயக்கத்தின் மகாசபைத் தலைவரான முரளிதரன் உட்பட்ட பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், மற்றும் தமிழ்த்தேசி
மக்கள் முன்னணி உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டதை கண்டிப்பதாக
தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் யாழ். மாவாட்ட ஒத்துழைப்பு இயக்கம்
கண்டித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |