கொரோனாவை கட்டுப்படுத்த தவறியமைக்கு கொரோனா தடுப்பு செயலணியே காரணம்! ரணில் குற்றச்சாட்டு

Srilanka Parliment Ranil
By Dhayani Aug 05, 2021 04:26 PM GMT
Report

இலங்கையில் கொரோனாவை கட்டுப்படுத்தும் செயற்பாடு தோல்வியடைந்துள்ளதாகவும், இதற்கு கொரோனா தடுப்பு செயலணியே பிரதான காரணமெனவும், நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தி மக்களின் உயிரை காப்பாற்ற வேண்டுமெனின், கொரோனா செயலணியிடம் இருந்து அந்த கடமைகளை ஸ்ரீலங்கா அமைச்சரவை பொறுப்பேற்பதோடு, அதற்கென விசேட குழு ஒன்றை அமைக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,


டெல்டா இன்று உளகளவில் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதனை நாம் கட்டுப்படுத்த வேண்டும். இன்று நாம் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதில் தோல்வியடைந்துள்ளோம்.

எனினும் எம்மால் முடியும். நிதி ஒதுக்கீடுகளுக்குச் செல்ல வேண்டும். முடியுமான இடத்தில் அவற்றை பெற்றுக்கொள்ளுங்கள். அதற்கு நாடாளுமன்றத்தில் பின்னர் அனுமதியை பெற்றுக்கொள்ள முடியும்.

மக்கள் இன்று வைத்தியசாலைகளில் இருக்கின்ற நிலை? இராணுவத்திற்கு சொந்தமான வைத்தியசாலைகள் காணப்படுகின்றன. தகரங்கள் மற்றும் தென்னை மரப்பலகைகளைக் கொண்டு நிர்மாணிக்க முடியும்.

இராணுவமும் பொறியியலாளர் கூட்டுத்தாபனமும் இணைந்து இதனை செயற்படுத்த முடியும். வைத்தியசாலைகளுக்கு அருகில் இதனை அமைக்க முடியும். எங்களுக்கு உதவ முடியும்.

பிரதி சுகாதார பணிப்பாளரின் கருத்துடன் இணங்க வேண்டிய நிலைமை குறித்து நாம் கவலையடைகின்றேன், கொரோனா தொற்று தடுப்பு செயலணி இருக்கும் வரையில் நாம் வேடிக்கை பார்க்க வேண்டியதுதான். இத நடக்கப்போவது இல்லை.

ஆகவே அமைச்சரவை இதனை பொறுப்பேற்று குழு ஒன்றை அமையுங்கள். இந்த சபைக்கு வாருங்கள். அந்த குழுவிற்கு நாம் உதவுகின்றோம். இது இன்று தோல்வியடைந்துள்ளது. சரியாக இதனை முகாமைப்படுத்த முடியாமல் போயுள்ளது.

இதற்கு முன்னர் பலர் இதுத் தொடர்பில் வலியுறுத்தியுள்ளார்கள். இது தேசியப் பிரச்சினை. எமக்கு கொரோனாவிற்கு சிகிச்சையளிப்பதற்காக புதியதொரு ஒதுக்கீடு ஒன்றை மேற்கொள்ள முடியாதா?

கொள்முதல் கொள்கையொன்று இல்லாவிட்டாலும் பரவாயில்லை, இறுதியில் அரச கணக்கு குழுவே இதுத் தொடர்பில் ஆராயும். தாமதிக்க முடியாது.மக்களின் உயிரை காப்பாற்ற வேண்டும். இறுதியில் வந்து ஒதுக்கீடு தொடர்பில் பேச வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US