2022 ஆம் ஆண்டு வரவுசெலவு திட்டத்தினை கொண்டு வருவதில் சிக்கல்:தி.சரவணபவன் (VIDEO)
மட்டக்களப்பு மாநகர சபையின் 2021ஆம் ஆண்டுக்கான வேலைத்திட்டங்களை மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளர் உட்பட அதிகாரிகள் நடைமுறைப்படுத்தாத காரணத்தினால் 2022 ஆம் ஆண்டு வரவுசெலவு திட்டத்தினை கொண்டு வருவதில் பல சிக்கல்கள் உள்ளதாக மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாநகர சபையின் 2022ஆம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்ட பாதீடு தயாரிக்கும் போது பொது மக்களின் கருத்துகளையும் உள்வாங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் மக்களின் கருத்துகளைக்கொண்டு பாதீடுகளை தயாரிக்கும் பணிகள் முன்னெடுத்துள்ளன.
இது தொடர்பில் பொது அமைப்புகளின் கருத்துகளை அறியும் வகையிலான கூட்டம் இன்று மாலை மட்டக்களப்பு மாநகரசபையில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாநகரசபையின் பிரதிமுதல்வர் க.சத்தியசீலன்,மாநகரசபை உறுப்பினர்கள்,பிரதி ஆணையாளர் உ.சிவராஜா,கணக்காளர் சிவராஜா உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தில் மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சனசமூக நிலையங்கள்,கிராம அபிவிருத்தி சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
மட்டக்களப்பு மாநகரசபையினால் எதிர்வரும் 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட தயாரிப்புகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், அந்த வரவு செலவுத்திட்டத்தில் பொதுமக்களின் கோரிக்கையினை நிறைவேற்றும் வகையிலேயே இந்த கூட்டங்கள் நடாத்தப்படுவதாக இங்கு தெரிவிக்கப்பட்டது.
எனினும் 2021ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீடுகளை மாநகரசபை நிர்வாகம் நடைமுறைபடுத்தாத காரணத்தினால் 2022ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டை சனசமூக நிலையங்கள் ஊடாக நடைமுறைப்படுத்தவுள்ளதாக இங்கு தெரிவிக்கப்பட்டது.
இங்கு கருத்து தெரிவித்த மாநகரசபை முதல்வர், மக்களினால் தெரிவு செய்யப்பட்ட மாநகரசபை முதல்வர் மற்றும் உறுப்பினர்கள் கொண்ட சபையில் முன்மொழியப்படும் திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டிய பொறுப்பு மாநகரசபை ஆணையாளர் மற்றும் உத்தியோகத்தர்களுக்கு உள்ளது.
ஆனால் மட்டக்களப்பு மாநகரசபையில் மக்களுக்கான கொண்டுவரப்பட்ட அபிவிருத்தி திட்டங்களை தடுக்கும் வகையிலான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மாநகரசபையின் ஆணையாளரின் செயற்பாடுகள் காரணமாக பல அபிவிருத்தி திட்டங்கள் இடை நிறுத்தப்பட்டுள்ளதாகவும் மாநகர முதல்வர் இதன்போது தெரிவித்துள்ளார்.








உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 2 நாட்கள் முன்

அடுத்த வாரம் கண்டிப்பாக சம்பவம் இருக்கு, முத்துவிடம் சிக்கிய ரோஹினி.. சிறகடிக்க ஆசை அடுத்த வார புரொமோ Cineulagam

Ethirneechal: விஷ பாம்பாக மாறிய குணசேகரன்.. நடுசாமத்தில் பதறிய நந்தினி- இது எப்படி முடிவுக்கு வரும்? Manithan
