ஏழுமலையானை தரிசிக்க திருப்பதி சென்ற பிரதமர்
பிரதமர் மகிந்த ராஜபக்ச (mahinda Rajapaksa) இரண்டு நாள் பயணமாக இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பதி நகருக்கு இன்று சென்றடைந்துள்ளார்.
திருப்பதி விமான நிலையத்தை சென்றடைந்த பிரதமரை, ஆந்திரா மாநிலத்தின் துணை முதலமைச்சர் கே. நாராயணசாமி (K.Narayanaswamy) மற்றும் சித்தூர் மாவட்ட ஆட்சியாளர் எம்.ஹரி நாராயணா(M.Harinarayana)மற்றும் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் வரவேற்றுள்ளனர்.
பிரதமர் மகிந்த ராஜபக்ச வீதி வழியாக திருப்தி ஏழுமலையான் ஆலயத்திற்கு செல்ல உள்ளதுடன் இரவு மலையில் தங்கியிருக்க உள்ளதாக தெரியவருகிறது.
பிரதமர் தனது குடும்பத்தினருடன் திருப்பதி ஏழுமலையான் ஆலயத்தில வழிபாடுகளில் ஈடுபடவுள்ளார்.
திருப்பதி ஏழுமலை வெங்கடேச பெருமாளின் தீவிர பக்தரான பிரதமர் மகிந்த ராஜபக்சவின் இரண்டு நாள் விஜயத்திற்கான சகல ஏற்பாடுகளையும் திருப்பதி தேவஸ்தானம் நிர்வாக சபையினர் மேற்கொண்டுள்ளனர்.
பிரதமர் மகிந்த ராஜபக்ச கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் திருப்பதி ஏழுமலை வெங்கடாசலபதி ஆலயத்திற்கு சென்றிருந்தார்.



அப்பாவுக்கு பிடிக்கும்... இலங்கை பாடகர் வாகீசனின் பாடலுக்கு நாட்டியம் ஆடி இந்திரஜா போட்ட பதிவு! Manithan
யாருக்கும் தெரியாமல் மயிலை பார்க்க சென்ற மீனா, அவரது அம்மா சொன்ன விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
முத்துவிடம் சிக்கிய க்ரிஷ் கடத்தல்காரர்கள், அடுத்து அருண் செய்த காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
ஆசிய நாடொன்றில்... கோடீஸ்வரர்கள் குவித்து வைத்திருக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri
எல்லாமே எல்லை மீறிப்போய்விட்டது... 2026ஆம் ஆண்டு குறித்த வங்கா பாபாவின் மற்றொரு எச்சரிக்கை News Lankasri