ஜனாதிபதியை இன்று சந்திக்கின்றார் பாகிஸ்தான் பிரதமர்
உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை இன்று சந்திக்கவுள்ளார்.
இந்த சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது. இதனையடுத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஆகியோர் இரு தரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளனர்.
ஜனாதிபதியுடனான கலந்துரையாடலுக்கு பின்னர் பாகிஸ்தான் பிரதமர், கொழும்பில் நடைபெறும் வர்த்தகம் மற்றும் முதலீட்டு மாநாட்டில் உரையாற்றவுள்ளார்.
இதனை தொடர்ந்து அமைச்சர் நாமல் ராஜபக்ஸவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மதிய போசனத்தில் பாகிஸ்தான் பிரதமர் கலந்து கொள்ளவுள்ளார்.
இன்று பிற்பகல், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவை சந்திக்கவுள்ள இம்ரான் கான், பின்னர் பாகிஸ்தான் நோக்கி பயணிக்கவுள்ளார்.
விஜய் - சங்கீதா சேர்ந்து வாழ முடிவு! வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைக்கும் எதிர்பாராத திருப்பம் Manithan
அண்ணாமலைக்கு தெரியவந்த வீட்டை அடமானம் வைத்த விஷயம், மனோஜிற்கு கொடுத்த தண்டனை... சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam
10 நாட்களாக வலியில் துடித்துள்ள கயல் சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி... அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam