பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த விசேட குழுவை நியமிக்கும் பிரதமர்
நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவது தொடர்பில் ஆலோசனை வழங்குவதற்காக உயர்மட்ட நிபுணர் குழுவொன்றை பிரதமர் ரணில் விக்ரமசிங்க நியமிக்கவுள்ளார்.
திறைசேரியின் முன்னாள் செயலாளர் கலாநிதி ஆர். எச். தி. சமரதுங்க தலைமையில் இந்தக் குழு நியமிக்கப்பட உள்ளதாகத் தெரியவருகிறது.
இதில் உறுப்பினர்களாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, திறைசேரியின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி, கலாநிதி ஷாமினி குரே உள்ளிட்டவர்கள் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த குழுவில் டெஷால் டி மெல், கலாநிதி சரத் ராஜபத்திரன, தினேஷ் வீரக்கொடி, அனுஷ்கா விஜேசிங்க, டேனியல் அல்போன்சோ மற்றும் துஷ்னி வீரக்கோன் ஆகியோரும் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிதி மற்றும் பொருளாதார ஸ்திரப்படுத்தல் அமைச்சின் கீழ் இந்த குழு செயற்படவுள்ளதுடன், பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கான செயற்திட்டமொன்றை விரைவில் வகுக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

ஈஸ்வரிக்கு ஆபத்து.. திருமண பிரச்சனைக்கு நடுவில் அடுத்த ஷாக்! எதிர்நீச்சல் தொடர்கிறது ப்ரோமோ Cineulagam

பாரதி கண்ணம்மா, கல்யாணம் முதல் காதல் வரை குழந்தை நட்சத்திரங்களை நியாபகம் இருக்கா?... எப்படி உள்ளார்கள் பாருங்க, வீடியோ Cineulagam

6 நாள் முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் தமிழகத்தில் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
