அதிகரிக்கும் நெருக்கடி நிலை! மற்றுமொரு அத்தியாவசிய உணவுப் பொருளின் விலை அதிகரிப்பு
நாட்டின் சில பகுதிகளில் பச்சை அரிசியின் விலை கிலோ 250 ரூபாவாகவும், முட்டை ஒன்றின் விலை 50 ரூபாவாகவும் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மற்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் மிக அதிகமாக உயர்ந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
திண்டாட்டத்தில் மக்கள்
உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்தில், அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை மக்கள் வாங்கி பதுக்கி வைத்திருப்பதுடன், விற்பனையாளர்கள் பொருட்களை சீரற்ற விலையில் விற்பனை செய்து வருகின்றனர்.

இந்த நாட்களில் கிராமப்புறங்களில் உள்ள பல கடைகளில் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இல்லாமல் மக்கள் திண்டாடுவதாகவும் தெரிய வருகிறது.
மேலும், கிராமம் மற்றும் தோட்டப் புறங்களின் பொருட்களை கடன் அடிப்படையில் பொதுமக்களுக்கு வழங்கி வந்த விற்பனையாளர்கள் தற்போது அந்த நடைமுறையை நிறுத்தியுள்ளதால் மக்கள் மிக இக்கட்டான நிலையை எதிர்நோக்கியுள்ளனர்.

ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 5 மணி நேரம் முன்
டிரம்ப் கலந்து கொண்ட விருந்தில் துப்பாக்கி சூடு: வெளியான தாக்குதல்தாரியின் பெயர், புகைப்படம் News Lankasri
ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri