பால்மாவின் விலை உயர்த்த அனுமதிக்கப்படாது – பந்துல குணவர்தன
பால்மாவின் விலையை உயர்த்த அனுமதிக்கப்படமாட்டாது என வர்த்தக விவகார அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
பால்மாவின் விலையை 200 ரூபாவினால் உயர்த்தினால் தற்பொழுது நாட்டில் நிலவும் பால் தட்டுப்பாடு நீங்கி விடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், பால் மாவிற்கான விலைகளை உயர்த்த இடமளிக்கப் போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
கோவிட் பெருந்தொற்று காரணமாக ஒட்டுமொத்த உலகிலும் விநியோக வலையமைப்பு நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாகவும், இதனால் போக்குவரத்து மற்றும் கப்பல் கட்டணங்கள் அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
விலை அதிகரிப்பிற்கு அனுமதி வழங்காத காரணத்தினால் பால் மா நிறுவனங்கள் இறக்குமதி செய்யவில்லை எனவும் இதனால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
நாட்டில் பால்மாவிற்கு பாரியளவில் தட்டுப்பாட்டு நிலைமை நீடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.