தற்போதைக்கு ஜனாதிபதித் தேர்தலே பொருத்தமானது! அமைச்சர் ரொஷான் ரணசிங்க வலியுறுத்தல்
நாட்டின் தற்போதைய நிலையைப் பொறுத்து ஜனாதிபதித் தேர்தல் ஒன்று நடத்தப்படுவதே பொருத்தமானதாக இருக்கும் என்று அமைச்சர் ரொஷான் ரணசிங்க வலியுறுத்தியுள்ளார்.
இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் புதிய தொழில்முயற்சியாளர்கள் மற்றும் விவசாயப் பண்ணைகளின் உற்பத்திகளுக்கான கண்காட்சியொன்றை ஏற்பாடு செய்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமான இந்தக் கண்காட்சி மூன்று நாட்கள் தொடர்ச்சியாக நடைபெறவுள்ளது.
ஜனாதிபதித் தேர்தலே பொருத்தமானது
நிகழ்வின் ஆரம்ப வைபவத்தில் கலந்து கொண்ட இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க கண்காட்சியை ஆரம்பித்து வைத்தார்.
அதன் பின் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், தற்போதைய சந்தர்ப்பத்தில் தேர்தல் ஒன்றை எதிர்பார்ப்பதாயின் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படுவதே பொருத்தமானதாக இருக்கும்.
பிரதேச போன்ற உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்கள் மூலம் நாட்டின் எந்தப் பிரச்சினையையும் தீர்க்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.