முன்னாள் அமைச்சர் கெஹலியவுக்கு விளக்கமறியல்
புதிய இணைப்பு
ஊழல் குற்றத்தைச் செய்ததாக சந்தேகத்தின் பேரில் மூன்று குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி இந்த உத்தரவினை இன்று (7) பிறப்பித்தார்.
முதலாம் இணைப்பு
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீதிமன்றத்தில் முன்னிலை
இன்று (7) அவர் வாக்குமூலம் அளிக்க ஆணைக்குழு முன் முன்னிலையானபோது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.
களமிறக்கப்பட்ட B-52 அணு குண்டுவீச்சு விமானம்... பயணிகள் விமானங்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை News Lankasri
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan
புலம்பெயர்ந்தோருக்கு வேலை கிடையாது... பிள்ளைகளுக்கு பள்ளிகளில் இடம் கிடையாது: ஒரு திடுக் செய்தி News Lankasri