சட்டவிரோதமாக சேர்க்கப்பட்ட பல கோடி ரூபா சொத்து! அதிரடியாக முடக்கிய அதிகாரிகள்
இரத்தினபுரி, எஹெலியகொட பகுதியில் ஒருவரால் சட்டவிரோதமாக சேர்க்கப்பட்ட ரூ.62 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள சொத்துக்களை முடக்க சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.
எஹெலியகொட பகுதியில் வசிக்கும் ஒருவர் மதுபானம் மற்றும் போதைப்பொருள் கடத்தல் மூலம் சொத்துக்களை ஈட்டியதாக சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த முறைப்பாட்டிற்கமைய விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
சொத்துக்களை முடக்க நடவடிக்கை
சந்தேகநபர் எஹெலியகொட- இரத்னபுர சாலைக்கு அருகில் பல மில்லியான பெறுமதியான 03 காணிகள், அதில் கட்டப்பட்ட நவீன ஒற்றை மாடி வீடு மற்றும் இரண்டு மாடி வீடு கொண்ட நிலம் ஆகியவற்றை சட்டவிரோதமாக பெறப்பட்ட பணத்தில் கொள்வனவு செய்யப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த விசாரணை தொடர்பாக, மேற்படி சந்தேகநபர் 12.11.2025 அன்றும், 21.11.2025 அன்றும் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, அவிசாவளை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
அத்துடன் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அவரது பெயரில் கொள்வனவு செய்யப்பட்ட சொத்தை 7 நாட்களுக்குள் முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் போது, நேற்று (21) முதல் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ், சந்தேகநபரும், அவர் சம்பாதித்த சொத்துக்களையும் முடக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கிரீன்லாந்து விவகாரம்... ட்ரம்பின் இரண்டு அதிரடி அறிவிப்புகள்: குதிக்கும் பங்குச் சந்தை News Lankasri
அண்ணன்கள் வீட்டில் ஏற்பட்ட அவமானம், அழுத கோமதிக்கு வந்த சந்தோஷ செய்தி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 கொண்டாட்ட எபிசோட் Cineulagam
புருஷனா இருக்குறது முக்கியம் இல்ல.. சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடிக்கும் புருஷன் படத்தின் ப்ரோமோ Cineulagam