ஜனாதிபதி கோட்டாபய இன்று சபைக்கு வருகைத் தரலாம்! தயாராகும் எதிர்க்கட்சிகள் (video)
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்றையதினம் நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஜனாதிபதி நாடாளுமன்றத்திற்கு வருகைத் தந்து விட்டதாகவும், எனினும் இதுவரையில் சபையில் பிரசன்னமாகவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளின் காரணமாக பொதுமக்கள் வீதிக்கு இறங்கி பாரிய போராட்டங்களையும் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், நெருக்கடியான சூழலில் தற்போது நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்ற நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சபைக்கு பிரசன்னமாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை, ஜனாதிபதியிடம் கேள்விகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் தயாராகி வருவதாகவும் அறிய முடிகின்றது.
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 6 நாட்கள் முன்
பிக் பாஸ் டைட்டில் ஜெயித்த திவ்யாவுக்கு ரூ.50 லட்சம் மட்டுமின்றி மேலும் ஒரு பெரிய பரிசு! என்ன பாருங்க Cineulagam
டிரம்பை நம்பி ஏமாந்த ஈரான் போராட்டக்காரர்கள்: அமெரிக்கா நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது ஏன்? News Lankasri