அவரச கூட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுத்துள்ள ஜனாதிபதி?
சிறப்பு கூட்டம் ஒன்றுக்கு ஆளும் தரப்பின் கட்சி தலைவர்களுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த சந்திப்பு நாளை மாலை 06.30 மணிக்கு இடம்பெறவுள்ளதாக அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தற்போதைய அரசியல் நிலைமை குறித்து விவாதிப்பதே கூட்டத்தின் நோக்கமாகும்.
அரசாங்கம் தொடர்பான முக்கியமான விடயங்களை தீர்மானிக்கும் போது நெருக்கமாக ஈடுபட கட்சித் தலைவர்கள் அழைப்பு விடுத்ததை தொடர்ந்து இந்த சந்திப்பு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, தற்போதைய அரசியல் நிலைமை குறித்து விவாதிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அடுத்த வாரம் மத்திய குழு கூட்டத்தை கூட்ட உள்ளதாக அறிவித்துள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளுக்கு இடையிலான விரிசல் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மத்திய குழு கூடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




