ஜனாதிபதி கோட்டாபயவின் முடிவு சரியானது! யாழில் வைத்து ஞானசார தேரர் தகவல்
ஒரு நாடு - ஒரு சட்டம் தொடர்பான ஜனாதிபதி செயலணிக்குழுவின் தலைவராக, ஜனாதிபதி தன்னை நியமித்தது முற்றிலும் சரியான தீர்மானம் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் (Gnanasara Thero) தெரிவித்துள்ளார்.
ஒரு நாடு - ஒரு சட்டத்தை உருவாக்க பொதுமக்களின் கருத்துக்கள் மற்றும் யோசனைகளை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் நேற்று முன்தினம் வடக்கு மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே ஞானசார தேரர் இதனை கூறியுள்ளார்.
மக்களுக்கு ஏதுவான ஒரே சட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்ற காரணத்தினால், பல இனங்கள் நீண்டகாலமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக கடந்த காலங்களில் நான் தொடர்ந்தும் ஆராய்ந்து வந்தேன். பொறுப்புக் கூற வேண்டியவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்தேன்.
இதனால், இந்த பிரச்சினை பற்றி என்னை விட அறிந்தவர்கள் எவரும் இருக்க மாட்டார்கள். என்னை செயலணிக்குழுவின் தலைவராக நியமிக்க ஜனாதிபதி எடுத்த தீர்மானம் முற்றிலும் சரியான தீர்மானம் எனவும் ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார்.
Bigg Boss 10: கோபத்தில் இருந்த விஜய் சேதுபதியை கூலாக மாற்றிய போட்டியாளர்... அப்படியென்ன நடந்தது தெரியுமா? Manithan
T20 போட்டியில் 188 ஓட்டங்கள் விளாசிய பிரிட்டோரியஸ்; கெயிலின் 13 வருட சாதனை முறியடிப்பு News Lankasri