எதிர்க்கட்சி தலைவரை தொடர்புக்கொண்டு பேச்சுவார்த்தைக்கு அழைத்த ஜனாதிபதி
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை நேற்று தொலைபேசியில் தொடர்புக்கொண்டு உரையாற்றியதாக அரசாங்கத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசாங்கம் ஆரம்பித்துள்ள இயற்கை பசளை வேலைத்திட்டம் சம்பந்தமான பேச்சுவார்த்தைக்கு வருமாறு, ஜனாதிபதி, எதிர்க்கட்சித் தலைவருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
அரச உயர் அதிகாரிகள் சிலருடன் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர், ஜனாதிபதி, எதிர்க்கட்சித் தலைவருக்கு இந்த தொலைபேசி அழைப்பை எடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.
இயற்கை பசளை சம்பந்தமாக அரசாங்கம் முன்னெடுத்து வரும் வேலைத்திட்டத்தை எதிர்க்கின்றீர்களா என ஜனாதிபதி, எதிர்க்கட்சித் தலைவரிடம் வினவியுள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர், கமத்தொழில் அமைச்சு மற்றும் அதன் அதிகாரிகள் மத்தியில் இருந்து இதற்கு எதிராக பலமான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
இதனையடுத்து கமத்தொழில் அமைச்சின் உயர் அதிகாரிகளை தொடர்புக்கொண்டு பேசியுள்ள ஜனாதிபதி, இயற்கை பசளை தொடர்பான வேலைத்திட்டம் சம்பந்தமாக அறிக்கை எதுவும் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளதா என விசாரித்துள்ளார். அப்படியான எந்த ஆவணங்களும் இல்லை என அதிகாரிகள் பதிலளித்துள்ளனர்.
இந்த நிலையில், இது குறித்து விரிவாக கலந்துரையாட வருமாறு ஜனாதிபதி, எதிர்க்கட்சித் தலைவருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
ஈரான் மீதான உக்கிரத் தாக்குதல்... பின்வாங்கிய ட்ரம்பின் முடிவுக்குப் பின்னால்: வெளிவரும் பின்னணி News Lankasri