ஜனாதிபதி என்னை கீழ்த்தரமாக திட்டினார் - விஜயதாச ராஜபக்ச
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தன்னை கூடாத வார்த்தைகளால், மிகவும் ஆவேசமாகவும் மோசமாகவும் திட்டியதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பில் அவரது வீட்டில் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
இன்று காலை தொலைபேசியில் தொடர்புகொண்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மிகவும் கீழ்த்தரமாக குற்றம் சுமத்தினார்.
ஜனாதிபதி ஒருவருக்கு பொருத்தமற்ற மிகவும் ஆத்திரத்துடன் ஆவேசமாகவும் கீழ் தரமாக திட்டினார்.
இதனால், ஜனாதிபதி என்னிடம் பேசிய மொழியிலேயே அவருக்கு பதிலளித்தேன். விருப்பமின்றி அதனை செய்ய நேரிட்டது.
இது சம்பந்தமாக பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு செய்துள்ளேன். எனது குடும்பம் மற்றும் பிள்ளைகள் குறித்து அச்சமாக இருப்பதாகவும் விஜயதாச ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
Casting Couch இருக்கு.. நிறைய நான் சந்தித்திருக்கிறேன்.. அய்யனார் துணை சீரியல் நடிகை மதுமிதா கூறிய உண்மை Cineulagam
சரவணன், அஞ்சலியை ஒரே இடத்தில் பார்த்து அதிர்ச்சியடையும் மீனா.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரோமோ வீடியோ Cineulagam
உயில் கிடைத்தவுடன் மீண்டும் வீட்டிற்குள் வந்த அய்யனார் துணை குடும்பம்.. அடுத்து நடக்கப்போகும் விஷயம் இதுதான் Cineulagam