அதிகாரிகளுக்கு ஜனாதிபதி வழங்கியுள்ள பணிப்புரை
கோவிட் நிதியத்தில் உள்ள 1.8 பில்லியன் ரூபா நிதியை அத்தியாவசிய மருந்துப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக வழங்குமாறு சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல, திறைசேரியின் செயலாளர் மகிந்த சிறிவர்த்தன உள்ளிட்ட தரப்பினருக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பணிப்புரை வழங்கியுள்ளார்.
தற்போது நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் நிலையில், சுகாதாரத்துறையில் விசேட அவதானம் செலுத்தப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல, திறைசேரியின் செயலாளர் மகிந்த சிறிவர்தன, சுகாதார அமைச்சின் செயலாளர் எஸ்.ஜே.எஸ்.சந்தகுப்த, அமைச்சின் மேலதிக செயலாளர் வைத்தியர் சமன் ரத்நாயக்க உள்ளிட்ட அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடலொன்று நேற்று கொழும்பிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,