ஜனாதிபதியிடம் மாணவர்கள் விடுத்த கோரிக்கை! உடனடியாக அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்ட பணிப்புரை
கண்டி-மெனிக்திவெல மத்திய கல்லூரி மாணவர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் முன்வைத்த கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் எண்ணக்கரு
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எண்ணக்கருவின் பிரகாரம் ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை, துறைமுக நகரம், மத்திய வங்கி, நாடாளுமன்றம் உள்ளிட்ட கொழும்பை சுற்றியுள்ள கல்வியுடன் முக்கிய தொடர்புடைய விசேட இடங்களை பார்வையிடும் வாய்ப்பு பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

மெனிக்திவெல மத்திய கல்லூரியில் கல்வி கற்கும் சுமார் 570 மாணவர்கள் நேற்று(05) களப்பயணத்தில் இணைந்துள்ளனர்.
இதன்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்த மாணவர்கள், தமது பாடசாலைக்கு ஸ்மார்ட் வகுப்பறையொன்றை வழங்குமாறும், விளையாட்டு மைதானத்தை நவீனமயப்படுத்துமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோரிக்கை
மாணவர்கள் விடுத்த கோரிக்கை தொடர்பில் கவனம் செலுத்திய ஜனாதிபதி, அதற்கான பணிகளை துரிதமாக மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

மேலும் இராணுவத்தினரின் பங்களிப்புடன் கல்லூரியின் மைதானத்தை நவீனமயப்படுத்துமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
கல்லூரியில் விளையாட்டுத் துறையில் திறமை செலுத்தும் சிறார்களையும் ஜனாதிபதி இதன்போது பாராட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 5 நாட்கள் முன்
இரவில் உக்ரைன் மீது படையெடுத்த 200க்கும் மேற்பட்ட ரஷ்ய ட்ரோன்கள்: சுட்டு வீழ்த்த போராடிய வீரர்கள் News Lankasri
விருது விழாவில் பட்ட அவமானம்.. Bigg Boss 9 டைட்டில் ஜெயித்தபின் கண்கலங்கி பேசிய திவ்யா கணேஷ் Cineulagam