துறைமுக நகர ஆணைக்குழு சட்டமூலம் என்பது வேறு பிராந்தியத்திற்கான சட்டங்கள் - அனுரகுமார திஸாநாயக்க
கொழும்பு துறைமுக நகர விசேட பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தில் இருப்பது வேறு பிராந்தியத்திற்கான சட்டங்கள் என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
துறைமுக நகர விசேட பொருளாதார ஆணைக்குழு தொடர்பான சட்டமூலம் குறித்த விவாதத்தில் இன்று கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
துறைமுக நகர பிராந்தியத்திற்கு இலங்கையின் சில சட்டங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன் வேறு சட்டங்களில் இருந்து அந்த பிராந்தியத்திற்கு விலக்களித்துள்ளனர். பல சட்டங்கள் அந்த பிராந்தியத்திற்காக தளர்த்தப்பட்டுள்ளன.
இந்த சட்டமூலத்தில் நாடாளுமன்றத்திற்கு கீழ் கொண்டு வரப்படாத 7 சட்டங்கள் இருக்கின்றன. துறைமுக நகரம் இந்த 7 சட்டங்களுக்கு உட்படுத்தப்பட மாட்டாது.
சட்டமூலம் நாட்டின் நிதித்துறையுடன் சம்பந்தப்பட்டுள்ளதுடன் மேலும் 14 சட்டங்கள் ஆணைக்குழுவிற்கு தேவையான வகையில் திருத்துவதற்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது எனவும் அனுரகுமார திஸாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
