லண்டனில் மர்ம நபரொருவரை சுட்டுக்கொன்ற பொலிஸார்!விசாரணைகள் தீவிரம்
பிரித்தானியாவின் தலைநகரான லண்டனில் கென்சிங்டன் அரண்மனை அருகே அடையாளம் தெரியாத மர்ம நபரை பொலிஸார் சுட்டுக்கொன்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .
லண்டனின் Kensington-ல் Marloes சாலையில் உள்ள வங்கி மற்றும் புத்தக தயாரிப்பு பகுதியில், மர்ம நபரொருவர் துப்பாக்கியுடன் வந்து அங்கிருந்து பின்னர் வெளியேறியுள்ளார்.
இது குறித்து பொலிஸாருக்கு உடனடியாக தகவல் வழங்கப்பட்டதையடுத்து ஆயுதமேந்திய பொலிஸார் நடத்திய தீவிர சோதனையின் பின்னர் 15 நிமிடங்களுக்குள் குறித்த நபரின் வாகனம் Kensington சாலை மற்றும் அரண்மனை கேட் சந்திப்பில் இருப்பதை கண்டுபிடித்து பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
இதன்போது பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் குறித்த நபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் உயிரிழந்த நபர் தொடர்பான தகவல்களை அறிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில், பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டமைக்கான காரணம்? இடையில் நடந்தது என்ன என்பது குறித்து எந்த ஒரு விபரமும் வெளியாகவில்லை என்றும் கூறப்படுகின்றது.

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

சரிகமப சீசன் 5 போட்டியாளர்களுக்கு மாபெரும் பரிசுத் தொகை அறிவிப்பு... இத்தனை லட்சத்தில் வீடா? Cineulagam

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri
