மாடுகளை ஏற்றிச் சென்ற லொறி மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு
மாத்தறை - கனங்கே பகுதியில் மாடுகளை ஏற்றிச் சென்ற லொறி ஒன்றின் மீது பொலிஸாரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவமானது, இன்று (11.04.2024) அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
கனங்கே - ரஜமஹா விகாரைக்கு அருகில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸார், பசு மாடொன்றை ஏற்றிச் சென்ற லொறியினை சோதனைக்காக நிறுத்துமாறு உத்தரவிட்டுள்ளனர்.
[QXVJXGJ[
ஒருவர் படுகாயம்
இருப்பினும், உத்தரவை மீறி லொறி சென்றுள்ள லொறியை குறி வைத்து பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

இதன்போது, லொறியிலிருந்த மூவரில் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.
சந்தேகநபர் சிகிச்சைக்காக கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
பாகிஸ்தானில் இருந்து பாதியில் நாடு திரும்பும் 8 இலங்கை கிரிக்கெட் வீரர்கள்: ஒருநாள் தொடர் ரத்து? News Lankasri
ரூ.1.5 கோடி மதிப்பிலான குடியிருப்பு: பென்சிலால் துளையிட்ட நபர்: அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சி News Lankasri