பொலிஸாரிடம் சிக்கிய ரஞ்சன் ராமநாயக்க தரப்பின் தேர்தல் சுவரொட்டிகள்!
தேர்தல் சட்டத்திற்கு முரணாக விநியோகிக்கப்பட இருந்த ரஞ்சன் ராமநாயக்க தலைமையிலான ஐக்கிய ஜனநாயகக் கட்சியின் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுவரொட்டிகள் மற்றும் துண்டுப் பிரசுரங்களை லிந்துலை பொலிஸார்(Lindula) கைப்பற்றியுள்ளனர்.
ஹட்டன் பகுதியில் இருந்து நுவரெலியா நோக்கிய பயணித்த முச்சக்கர வண்டியொன்றை சோதனையிட்டபோதே குறித்த சுவரொட்டிகள் மற்றும் துண்டுப் பிரசுரங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
குறித்த நடவடிக்கை நேற்று (03.11.2024) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
சுவரொட்டிகள் மற்றும் துண்டு பிரசுரங்கள்
சோதனையின்போது போட்டியிடும் வேட்பாளரின் விருப்ப இலக்கம் கொண்ட சுவரொட்டிகள் மற்றும் துண்டு பிரசுரங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட சுவரொட்டிகள் மற்றும் துண்டு பிரசுரங்கள் நுவரெலியா பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு தோட்டபுற பகுதிகளில் காட்சிப்படுத்த திட்டமிடப்பட்டிருந்தமை ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட சாரதி, முச்சக்கரவண்டி, சுவரொட்டி மற்றும் துண்டுப் பிரசுரங்களை நுவரெலியா நீதவான் நீதிமன்றில் முன்னிலைபடுத்த பொலிஸார் நடவடிக்கையெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
முத்துவிடம் சிக்கிய க்ரிஷ் கடத்தல்காரர்கள், அடுத்து அருண் செய்த காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
படப்பிடிப்பு தளத்தில் திடீர் சண்டை போட்டுக்கொண்ட மகாநதி சீரியல் நடிகர்கள்... வைரலாகும் வீடியோ Cineulagam
அப்பாவுக்கு பிடிக்கும்... இலங்கை பாடகர் வாகீசனின் பாடலுக்கு நாட்டியம் ஆடி இந்திரஜா போட்ட பதிவு! Manithan
ஆசிய நாடொன்றில்... கோடீஸ்வரர்கள் குவித்து வைத்திருக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri