காணாமல் ஆக்கப்பட்ட முன்னாள் போராளியின் மனைவியின் அவல நிலை
தமிழீழம் வேண்டி நாட்டிற்காக யுத்த களத்தில் போராடிய போராளிகளின் குடும்பங்கள் எண்ணவோ இன்றும் தனது வாழ் நாளில் துன்பங்களை அனுபவித்துக் கொண்டு தான் வாழ்கின்றார்கள்.
அந்தவகையில், கிளிநொச்சி- இராமநாதன் கமம் , மருதன்நகர் பகுதியில் உதயகுமார் விஜயரஞ்சினி குடும்பத்தினர் அன்றாடம் பல இன்னல்களுடன் நாட்களை கழித்துக்கொண்டிருக்கின்றனர்.
வெறுமனே 15ஆயிரம் ரூபா சம்பளத்தில் பால் விற்பனை நிலையத்தில் வேலை செய்வதாகவும், அதிலிருந்து கிடைக்கும் பணத்தைக் கொண்டு தான் வெறிக்கோஸ் நோயினால் பாதிக்கப்பட்ட தாயினைப் பராமரிப்பதுடன், குடும்பத்தினையும், பிள்ளையின் கல்வியினையும் பார்க்க வேண்டியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இவர்கள் யுத்தத்தின் காரணமாக தனது வாழ்வில் எதிர்நோக்கும் பிரச்சினைகளை ஐ.பி.சி தமிழின் 'என் இனமே என் சனமே' என்ற காணொளி ஊடாக இவ்வாறு பகிர்ந்துக் கொண்டுள்ளனர்.
இவர்களுக்கு உதவி செய்ய விரும்பினால் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும் Whatsapp /Viber +94767776363/+94212030600