பொருளாதார நெருக்கடியால் வெளிநாடுகளுக்கு சென்று இலங்கையர்களின் பரிதாப நிலை
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக வெளிநாடுகளுக்கு சென்ற இளைஞர்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.
வேலைவாய்ப்புக்காக மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றவர்களுக்கு அங்கு வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை எனத் தெரிய வருகிறது. இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் பலர் சுற்றுலா விசாவில் மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றுள்ளனர்.
ஏமாற்றப்படும் இளைஞர்கள்
எனினும், இவ்வாறான பெருமளவு இலங்கையர்கள் பல மாதங்களாக வேலை வாய்ப்பின்றி யாசகம் எடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
வேலைவாய்ப்பு நிறுவனங்களால் ஏமாற்றப்பட்டு, ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள பல்வேறு மாகாணங்களுக்கு சுற்றுலா விசாவில் இளைஞர்கள் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இவர்களிடம் 5 இலட்சம் ரூபா வரையில் பணம் அறிவிடப்பட்டுள்ளது. ஆனால், பல மாதங்களாக வேலையின்றி வெயிலில் பட்டினியுடன் வீதிகளில் நடந்து செல்கின்றனர்.
வேலைவாய்ப்பு முகவர்கள் அந்த நாட்டில் சுமார் 500,000 ரூபா சம்பளம் பெறுவது எளிது எனக் கூறி இளைஞர்களை ஏமாற்றி அங்கு அனுப்பியுள்ளதாக தெரிய வருகிறது.





பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
