கோவிட் தொற்றால் தாய் மரணம்! தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி தொற்றுடன் யாழிற்கு சென்ற மகன்
வவுனியாவில் கோவிட் தொற்றுக்குள்ளான தாய் ஒருவர் மரணமடைந்துள்ள நிலையில், குறித்த தாயுடன் தனிமைப்படுத்தப்பட்டிருந்த அவரது மகன் தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறி வீட்டில் இருந்து வெளியேறி யாழ்ப்பாணம் சென்றுள்ளார்.
இந்நிலையில், அவருக்கு எதிராக பொது சுகாதாரப்பரிசோதகர்களால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வவுனியா, கோவில்குளம், 5 ஆம் ஒழுங்கையில் கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் தாய் (வயது 73) மற்றும் மகன் (வயது 20) ஆகியோர் அவர்களது வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் , தாய்க்கு நோய் தாக்கம் அதிகரித்தமையால் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த போது சிகிச்சை பலனின்றி நேற்று மரணமடைந்துள்ளார்.
தாய் மரணமடைந்த தகவலை தெரியப்படுத்தி, குடும்பத்தினரை தகனக் கிரியைக்கு அழைப்பதற்காக பொது சுகாதார பரிசோதகர்கள் அவர்களது தனிமைப்படுத்தப்பட்டிருந்த வீட்டிற்கு சென்ற போது தொற்றுக்குள்ளான நிலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த மகன் வீட்டில் இருக்கவில்லை.
இது தொடர்பில் வீட்டில் இருந்த அவர்களது உறவினர்களிடம் விசாரித்த போது அவர் யாழ்ப்பாணம் சென்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ள பொதுசுகாதார பரிசோதகர்கள், தனிமைப்படுத்தல் சட்ட விதி முறைகளை மீறி செயற்பட்ட குறித்த இளைஞனுக்கு எதிராக வவுனியா பொலிஸார் ஊடாக வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.
வசூல் வேட்டையில் சமந்தாவின் 'எங்கள் தங்கம்' திரைப்படம்.. 3 நாட்கள் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri
திரையுலகில் புதிய டிரெண்ட்... புதிய எலக்ட்ரிக் கார் வாங்கிய பிரபுதேவா! விலை எவ்வளவு தெரியுமா? Manithan
உலக கோப்பை கால்பந்து: போட்டிக்கு பிறகு உடை மாற்றும் அறையில் ஈரான் வீரர்கள் விட்டுச் சென்ற கடிதம் News Lankasri