மாணவிகளை பின்தொடர்ந்து அச்சுறுத்திய மர்ம நபர்
பொகவந்தலாவ பிரதேசத்தில் பாடசாலை மாணவிகள் இருவரை மர்ம நபர் ஒருவர் பின்தொடர்ந்து அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
பொகவந்தலாவ - கியூ தோட்டப் பகுதியில் இருந்து பொகவந்தலாவ நகரத்தில் உள்ள பாடசாலைக்கு செல்லும் மாணவிகள் இருவரே குறித்த சம்பவத்திற்கு முகம்கொடுத்துள்ளனர்.
மாணவிகள் இருவரும் பாடசாலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, ஆடைகள் ஏதும் இன்றி அவர்களை பின்தொடர்ந்த நபர், அச்சுறுத்தும் வகையில் சத்தமிட்டுள்ளார்.
இதனால் அச்சமுற்ற மாணவிகள் அருகில் இருந்தவர்களை சத்தமிட்டு அழைத்தபோது, குறித்த மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓடிச்சென்றதாக குறிப்பிடப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் மாணவிகளின் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.
குறித்த பிரதேசத்தில் இருந்து பல கிலோமீற்றர்கள் தொலைவில் உள்ள பாடசாலைகளுக்கு மாணவர்கள் நடந்தே செல்வதுடன், போக்குவரத்து வசதிகள் ஏதும் இல்லாமல் அல்லல்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
3 எம்.எல்.ஏக்கள் ஒரே குடும்பத்தில்.,அரசியலில் கால்பதிக்கும் லாட்டரி மார்டின் குடும்பம் News Lankasri