ரயில் என்ஜினில் இருந்து டீசல் திருடிய நபர்
நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயிலில் இருந்து நபரொருவர் டீசலை திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிலாபம் பகுதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் என்ஜினில் இருந்து அந்த நபர் டீசலை திருடியுள்ளார் என பொலிஸார் தெரிவித்தள்ளனர்.
ரயில் நிலையத்தில் கடமையாற்றும் ஊழியர் கைது
குறித்த நபர் சிலாபம் ரயில் நிலையத்தில் கடமையாற்றும் உதவி புகையிரத தொழில்நுட்ப உத்தியோகத்தர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபரிடம் இருந்து 15 லீட்டர் டீசலையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இன்று காலை கொழும்பு நோக்கிச் செல்லும் ரயிலின் இயந்திரம் சிலாபம் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்ஜினில் இருந்த எரிபொருளை சந்தேக நபர் திருடிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ரயில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் பொலிஸாருக்கு வழங்கிய முறைப்பாட்டின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் கைதான சந்தேக நபர் சிலாபம் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 4 நாட்கள் முன்

தென்னிந்தியாவில் முதன்முறையாக புதிய சாதனை படைத்த விஜய்யின் மதுரை TVK மாநாடு வீடியோ... குஷியில் ரசிகர்கள் Cineulagam

இந்த 3 சூழ்நிலைகள்... இந்தியாவிற்கு எதிராக மீண்டும் அணு ஆயுத மிரட்டல் விடுத்த பாகிஸ்தான் News Lankasri

இந்தியா-பிரான்ஸ் புதிய ஒப்பந்தம்: உள்நாட்டில் 5-ஆம் தலைமுறை போர் விமான எஞ்சின்கள் தயாரிப்பு News Lankasri
