புகையிலை சுருட்டைப் பற்ற வைத்த நபர் உயிரிழப்பு
முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பகுதியை சேர்ந்த முதியவர் ஒருவர் தீயில் எரிந்து காயமடைந்திருந்த நிலையில் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்.
கடந்த 6ஆம் திகதி குறித்த முதியவர் புகையிலை சுருட்டைப் பற்ற வைத்த போது தவறுதலாக அவரது சாரத்தில் தீ பற்றியுள்ளது.
இதனால் படுகாயமடைந்த அவர் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார் என எமது செய்தியாளர் தெரிவித்தார்.
சம்பவத்தில் சங்கரப்பிள்ளை வேதாரணியம் (வயது 79) என்ற முதியவரே உயிரிழந்துள்ள நிலையில் அவர் சிலகாலங்களாக மனநிலை பாதிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அவரது மரணம் தொடர்பாக வவுனியா நகர திடீர் மரண விசாரணை அதிகாரி சிவநாதன் கிஷோர் விசாரணைகளை முன்னெடுத்திருந்ததுடன், சடலத்தினை உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டிருந்தார்.
அதன்பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
சவப்பெட்டியில் டிரம்ப் குடும்பம்: “ரத்தத்திற்கு ரத்தம்” ஈரானின் விளம்பர பலகையால் வெடித்த சர்ச்சை News Lankasri
அந்தரங்க புகைப்படங்களை நண்பர்களுக்கு அனுப்பிய கணவர்- பகீர் தகவல் கூறிய சீரியல் நடிகை மோனிஷா Cineulagam