2022 இலும் கோவிட்டுடன் வாழ வேண்டிய அவலம்! இலங்கை வைத்தியர்கள் எச்சரிக்கை
2022ஆம் ஆண்டிலும் கோவிட் வைரஸிடன் வாழ வேண்டிய நிலைமை ஏற்படும் என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் வைத்தியர் சந்திம ஜீவன்தர தெரிவித்துள்ளார்.
நாட்டில் புதிதாக 41 ஒமிக்ரோன் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நாட்டில் நூற்றுக்கு 12 வீதம் ஒமிக்ரோன் அவதானமே உள்ளதென சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறான சூழ்நிலையில் மக்கள் பூஸ்டர் தடுப்பூசியை தவிர்ப்பது, நாட்டில் கோவிட் சுனாமி ஏற்படுத்த வழி அமைக்கும் நடவடிக்கை என சுகாதார வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர்.
கோவிட் தொற்று முடிவுக்கு வராது. கோவிட் தொற்றுடனேயே வாழ வேண்டியுள்ளது. இந்த வருடம் ஆரம்பிக்கும் போதே ஒமிக்ரோன் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
விசேடமாக பிரித்தானியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் தொற்று வேகமாக பரவியுள்ளது. தெற்காசியாவிலும் அவ்வாறான பாதிப்பு ஒன்று எதிர்வரும் காலங்களில் ஏற்படும்.
டெல்டா பரவிய சந்தர்ப்பத்திலும் இதே முறை காணப்பட்டது. பூஸ்டர் தடுப்பூசி மாத்திரமே ஆபத்தை தவிர்ப்பதற்கு உதவியாக இருக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.