விமானியின் அறைக்குள் புகுந்து பரபரப்பை ஏற்படுத்திய பயணி
அமெரிக்க ஏர்லைன்ஸ் பயணி ஒருவர் திடீரென விமானி அறைக்குள் புகுந்து கட்டுப்பாட்டுக் கருவிகளை சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அமெரிக்க நாடான ஹோண்டுரஸில் இருந்து மியாமிக்கு அமெரிக்க ஏர்லைன்ஸ்க்குச் சொந்தமான போயிங் 737-800 விமானம் செல்லவிருந்தது. இந்த விமானத்தில் 121 பயணிகள், 6 விமானப் பணியாளர்கள் இருந்தனர்.
விமானம் புறப்பட தயாரானபோது, பயணி ஒருவர் திடீரென விமானி அறைக்குள் (Cockpit) புகுந்து, கட்டுப்பாட்டுக் கருவிகளை கண்மூடித்தனமாக தாக்கி சேதப்படுத்தினார்.
விமானி தடுக்க முயன்றும், பலனளிக்கவில்லை. கட்டுப்பாட்டுக் கருவிகளை சேதப்படுத்திய நிலையில், கொக்பிட் ஜன்னல் வழியாக கீழே குதிக்க முயன்றார். ஒரு வழியாக விமானப் பணியாளர்கள் அவரைப் பிடித்து விமான நிலைய அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
அந்த பயணி ஏன் இவ்வாறு நடந்து கொண்டார் என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆதி குணசேகரனுக்கு இரண்டாவது அடி.. பெண்கள் அதிரடி! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட் Cineulagam

கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்.. ஜனனி போட்ட மாஸ்டர் பிளான்! பரபரப்பான கட்டத்தில் எதிர்நீச்சல் சீரியல் Cineulagam

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam
