பெற்றோரின் கட்டுப்பாடு - பாடசாலை மாணவியின் விபரீத முடிவு
மாவவெனல்ல பிரதேசத்தில் பாடசாலை மாணவி ஒருவர் விபரீத முடிவை எடுத்து உயிரை மாய்த்துள்ளார்.
தொலைபேசி பார்த்தல் மற்றும் கையடக்க தொலைபேசி பயன்பாட்டை நிறுத்திவிட்டு கல்வி நடவடிக்கையில் ஈடுபடுமாறு தந்தை எச்சரித்தமையினால் கோபமடைந்த சிறுமி விபரீத முடிவை எடுத்துள்ளார்.
இந்த சம்பவம் கடந்த 14ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாக மாவனெல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாடசாலை செல்லும் 13 வயதுடைய சிறுமியே இவ்வாறான தவறான முடிவை எடுத்துள்ளார் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
தனது தந்தை எச்சரித்தமையினால் இந்த சிறுமி வீட்டின் மேல் மாடியில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இரவு உணவிற்காக அவரை அழைக்க சென்ற போது அவர் தூக்கிட்ட நிலையில் காணப்பட்டார். எனினும் மருத்தவமனைக்கு கொண்டு சென்றுள்ள போதிலும் அவர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.