சுவிஸில் இயங்கும் வெளிநாட்டவர்களின் கருத்துக்களை நிறைவேற்றும் அமைப்பு! சேவை புரியும் தமிழ் பெண்
சுவிற்சர்லாந்து பேர்ண் மாவட்டத்தின் மேற்குப் பகுதியில் வெளிநாட்டவர்களின் கருத்துக்களை, அவர்களின் தேவைகளை நிறைவேற்றும் ஒர் அமைப்பே MIAQ ஆகும். இவ் அமைப்பில் கடந்த 18 ஆண்டுகளாக இணையர் ஆகிய நான் ஓர் நிர்வாக உறுப்பினராகக் கடமையாற்றுகின்றேன் என நந்தினி முருகவேல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் சுவிஸ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது குறித்து நந்தினி முருகவேல் குறிப்பிடுகையில்,
இவ் அமைப்பின் செயற்பாடுகளையும், அதில் என்னுடைய பங்களிப்பு எவ்வாறு உள்ளது எனவும், நான் எவ்வாறு இதில் இணைந்து கொண்டேன், எனவும் என்னுடைய தனிப்பட்ட விபரங்கள் தொடர்பாகவும் என்னிடம் ஓர் நேர்முக உரையாடலை பேர்ண் மாவட்டத்தின் வெளிநாட்டவர்களுக்குப் பொறுப்பான ஓர் அமைப்பினர் மேற்கொண்டிருந்தனர்.
இவர்களால் என்னிடம் முன்வைக்கப்பட்ட கேள்விகளும் அவற்றிற்கான விடைகளின் தொகுப்புக்களும்.
MIAQ என்னும் அமைப்பு என்றால் என்ன?
பேர்ண் மேற்குப் பகுதியின் அதாவது Bümpliz, Bethlehem என்னும் பகுதியில் வாழும் ஆனைத்து வெளிநாட்டவர்களினதும் தேவைகளையும், அவர்களின் மூலம் அறிந்து அவற்றை சுவிஸ் நாட்டில் அதற்கென பொறுப்பாக இருக்கும் அரச நிறுவனங்களுக்கு அவற்றை அறிவித்து அவர்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொடுக்கும் ஓர் அமைப்பாகும்.
அதாவதுவெளிநாட்டவர்கள் அனைவரும் கருத்துக்களை,தேவைகளைசுதந்திரமாகபரிமாறிக்கொள்ளும் ஓர் அமைப்பாகும். இதில் என்னுடைய பங்களிப்பாக தமிழ் மக்களினுடைய தேவைகளையோ அல்லது ஏனைய நாட்டு மக்களுடைய தேவைகளையோ அந்நந்த பொறுப்பான அமைப்புக்களுக்கு எழுத்துமூலம் சமர்ப்பித்து தீர்வினைப் பெற்றுக்கொடுப்பதாகும்.
எடுத்துக்காட்டாக இவ் MIAQ அமைப்பின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் Mikrofon Bern West என்னும் அனைத்து நாட்டவர்களும் கலந்துகொள்ளும் கலந்துரையாடலின் மூலம் அனைத்து வெளிநாட்டவர்களும் தங்களது தேவைகளை முன்வைப்பார்கள்.
2020 ஆம் ஆண்டு நடைபெற்ற இக்கலந்துரையாடலில் ஒருவர் வேலை செய்வதற்கு தடையாக இருக்கும் காரணங்களை எல்லா வெளிநாட்டவர்களும் முன்வைத்தார்கள். எடுத்துக்காட்டாக வதிவிட அனுமதிப்பத்திரம் வைத்திருப்பவர்களுக்கு வேலைகளைப் பெற்றுக்கொள்வது பேர்ண் மாவட்டத்தில் மிகவும் கடினமானது.
இது ஓர் முக்கியமான கோரிக்ககையாகும்.இக்கோரிக்கையை இதற்குப்பொறுப்பான அரச நிறுவனத்திடம் கையளித்திருக்கின்றோம்.
இவ் அமைப்பின் ஓர் தொழிற்பாடகவே INFOTIME அதாவது தாய்மொழியில் அந்தந்த நாட்டவர்களுக்கும் ஆலோசனை வழங்கும் ஓர் ஆலோசனை மையமாகும்.
இதன் மூலம் ஆலோசனைகள், மொழிபெயர்ப்புக்கள், அவர்களை சில அலுவலகங்களுக்கு அழைத்துச் செல்வது போன்ற செயற்பாடுகளை மேற்கொள்கின்றோம். இவ் INFOTIME அமைப்பில் தமிழ் மக்களுக்கான ஆலோசகராக நான் கடமையாற்றுகின்றேன்.
எவ்வாறு நீங்கள் இவ் MIAQ அமைப்பில் இணைந்து கொண்டீர்கள்?
நான் இலங்கையின் வடக்குப் பகுதியான யாழ்ப்பாணத்தில் பிறந்து கிளிநொச்சியில் உயர்தரக் கல்விவரைகற்று, யாழ் பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவத் துறையில் ஆங்கில மொழியில் கல்வியைக் கற்று, அதன் பின்னர் வவுனியா, கொழும்பு கச்சேரியில் கணக்காய்வாளராகக் கடமையாற்றினேன்.
எனது உயர்தரக் கல்வியிலிருந்து (1989 ஆம் ஆண்டிலிருந்து) நான் உயர்தர வர்த்தகத்துறை மாணவர்களுக்கு பாடங்களைக் கற்பித்திருந்தேன். அதாவது கணக்காய்வாளராகக் கடமையாற்றும்போது கணக்காய்வில் உள்ள தவறுகளைச் சுட்டிக்காட்டி திருத்துவது முக்கியமான பணியாகும்.
இவ்வாறான பணிகளால் நான் சில அரசியல் பிரச்சனைகளை எதிர்நோக்க வேண்டியிருந்தது. நான் இலங்கையை விட்டு வெளியேறுவதற்கு இதுவும் ஓர் காரணமாக அமைந்தது. 2000 ஆம் ஆண்டுநான் சுவிற்சர்லாந்து நாட்டிற்கு வந்திருந்தேன்.
என்னுடைய பல்கலைக்கழகச் சான்றிதழை சுவிசுநாட்டு அரசாங்கம் ஏற்றுக்கொண்டது. அதனால் சுவிற்சர்லாந்து நாட்டின் உயர் கல்லூரியில் ஒரு ஆண்டுகள் கல்வியினைக் கற்று கணக்காய்வுத்துறையில் சான்றிதழைப் பெற்றிருந்தேன். இதன் பின்னரே சுவிசு நாட்டிலும் ஓர் கணக்காய்வாளராகவும் கடமையாற்றுகின்றேன்.
அத்துடன் பண்பாட்டு மொழி பெயர்ப்பாளராகவும் 2 ஆண்டுகள் கற்கைநெறியை மேற்கொண்டேன். ஒருநாள் நான் ஏன்னுடைய மகளை நிறம் தீட்டல் வகுப்பிற்காக பெத்தலகேம் நகரிலுள்ள தேவாலயத்திற்கு அழைத்துவந்தேன்.
அவரை வகுப்பில் விட்டு விட்டு வெளியில் அமர்ந்திருந்தேன். அப்போது வெளியே வந்த தேவாலயத்தின் பொறுப்பாளர் என்னிடம் உரையாடினார். நீங்கள் நன்றாக யேர்மன் மொழி கதைக்கிறீர்கள், எங்களுக்கு ஒருவர் இவ் சிற்றுண்டிச்சாலையில் காசாளராகத் தேவை உங்களால் உதவி செய்யமுடியுமா என்று கேட்டார்கள்.
அன்றிலிருந்து நான் அங்கே கடமையாற்றினேன். அந்தக் காலப்பகுதியில் நான் பல சுவிசுநாட்டவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தக்கூடிய வாய்ப்புக்கள் ஏற்பட்டன. தமிழ்மக்கள் பலரது கடிதங்களைத் திருத்துவது, மொழிபெயர்ப்புக்களை மேற்கொள்வது என எனது பணிகள் அதிகரித்தன.
பெண்களுக்காக ஓர் ஒழுங்கான இடைவெளியில் நடைபெறும் உரையாடல்களை மேற்கொள்வது கர்ப்பிணிப் பெண்களுக்கான உரையாடல்களை வைத்தியர்களுடன் இணைந்து மேற்கொள்வது போன்ற பல திட்டங்கள் அதிகரித்தன.
இவ் அமைப்பின் செயற்பாடுகள் மூலம் எவ்வாறு இன்னும் அதிகமான சேவையை வெளிநாட்டு மக்களுக்கு வழங்கலாம்?
வெளிநாட்டுமக்களுக்கானதேவைகள்,பிரச்சனைகள் அதிகம் இருப்பதால் நாங்கள் இவ் வேலையின் கூடியபங்கை இலவசமாகவேதமிழ்மக்களுக்காகவும்,ஏனையநாட்டுமக்களுக்காகவும் செய்கின்றோம். எனவே இலவசமாக மக்களுக்காக சேவை செய்ய விரும்புபவர்கள் பலர் எம்முடன் இணைந்து செயற்பட்டால் இன்னும் அதிகளவான சேவையை நாம் வழங்கலாம்.
அனைத்து நாட்டு மக்களாலும் முன்வைக்கப்படும் பிரச்சனைகளை,தேவைகளை நீங்கள் எவ்வாறு தீர்த்துவைக்கீறீர்கள்?
வெளிநாட்டு மக்கள் அனைவரும் தங்களது பிரச்சனைகளையும், அதற்காக தாங்கள் என்ன தீர்வுகளை எதிப்பார்க்கின்றோம் என்றும் கூறுவார்கள். இவ் அமைப்பில் முக்கியமாக நாங்கள் 5 பேர் இவற்றை சுவிசு நாட்டு அரசாங்கத்திற்கு அறிவித்த அது தொடர்பாக அவர்களடன் பல கூட்டங்களில் கலந்துரையாடி தீர்வுகளைப் பெற்றுக்கொள்கின்றோம்.
MIAQ வின் உடைய திறந்த ஓர் திட்டமாக நீங்கள் எதைக் கூறுவீர்கள்?
MIAQ வின் திட்டங்கள் அனைத்தும் மிகச் சிறந்தவையே. அதிலும் 2018 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட INFOTIME என்னும் ஆலோசனை மையமானது மிகச் சிறந்தததாகக் காணப்படுகின்றது. ஏனெனில் மற்றைய ஆலாசனை மையங்களோ, சமூக சேவையாளர் INFOTIME பல நாட்டு மக்களின் தாய்மொழியில் நடைபெறுவதால் பல நாட்டு மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது.
மொழிப்பிரச்சனை என்பது இங்கு இல்லாததால் எல்லா நாட்டு மக்களுக்கும் இது ஓர் வரப்பிரசாதம் ஆகும். தமிழ் மக்களுக்கு ஆலோசகராக நான் கடமையாற்றுகின்றேன்.
தாய்மொழியில் இவ் ஆலோசனைகள் அமைந்துள்ளதால் அனைத்து நாட்டு மக்களும் இவ் ஆலோசனை மையம் தொடர்ந்தும் இயங்க வேண்டும் என எங்களிடம் வேண்டுகோள் வைத்துள்ளார்கள்.
எனவே தமிழ் மக்களுக்கு மட்டுமன்றி ஏனைய நாட்டு மக்களுக்கும் சேவை செய்யும் ஓர் சந்தர்ப்பம் கிடைத்ததை இட்டு மிகவம் மகிழ்ச்சியடைகின்றேன். என் தந்தையின் ஆசீர்வாதத்துடன் என் சமூகப்பணி தொடரும் எனக்கூறி விடைபெறுகின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.






போலியான திருமணம்... நாடுகடத்தப்பட்ட புலம்பெயர் நபர் பிரித்தானியாவில் குடும்ப விசாவிற்கு விண்ணப்பம் News Lankasri

அமெரிக்காவில் 11 வருடங்கள்... இந்தியா திரும்பியவர் 3 ஆண்டுகளில் உருவாக்கிய ரூ 280 கோடி நிறுவனம் News Lankasri

ஜெயிலர் 2 இன்னும் ரிலீஸ் ஆகல.. அதுக்குள்ள ரஜினிகாந்த் எடுத்த அதிரடி முடிவு! என்ன தெரியுமா Cineulagam
