டித்வா புயல் விவகாரம்! அரசாங்கத்தின் மீது தொடர்ந்தும் சுமத்தப்படும் குற்றச்சாட்டு..
சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் முன் எச்சரிக்கைகள் இருந்தபோதிலும், டித்வா சூறாவளியின் தாக்கத்தைத் தணிக்கவும் நிர்வகிக்கவும் தவறியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் அரசாங்கம் தொடர்ந்தும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளாகி வருகிறது.
இதன்படி, 2025 நவம்பர் 25 ஆம் திகதிக்கு, வானிலை ஆய்வுத் மையம் மற்றும் நீர்ப்பாசனத் துறை இது தொடர்பாக முன்கூட்டியே அறிவித்திருந்தன. இருப்பினும், அரசாங்கம் முன்கூட்டியே நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டதாகக் கூறப்படுகிறது.
மனித உயிர் இழப்பு
வானிலை ஆய்வு மையம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ளது.

அதே நேரத்தில் அனர்த்த முகாமைத்துவ மையம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் கீழ் முன்னெடுக்கப்படுகிறது. அனர்த்த முகாமைத்துவ மையத்தின் தேசிய நிர்வாகக் குழு வருடத்திற்கு நான்கு முறை கூட வேண்டும்.
ஆனால், இந்த ஆண்டு ஒரு முறை கூட அது கூடவில்லை என்று கொழும்பின் செய்தித்தாள் ஒன்று கூறுகிறது. இந்தநிலையில் அரசாங்கம் சட்டத்தின்படி செயல்பட்டிருந்தால், மனித உயிர் இழப்பு தவிர்க்கப்பட்டிருக்கலாம்.
அத்துடன் அனர்த்த நிலைமையை அறிவிக்க சட்டத்தின் கீழ் ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளது.
இந்த விடயத்தில் அவர் தவறினால், அது உயர் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட அரசியலமைப்பை மீறுவதாகும் என்றும் ஆங்கில ஊடகம் கூறுகிறது.