சுருக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட கன்னியாஸ்திரி
காலி களுவெல்ல ஸ்ரீ இருதய கன்னியர் மடத்தில் யுவதி ஒருவர் கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.
கன்னியாஸ்திரியாக பயிற்சி பெற்று வந்த யுவதியே இவ்வாறு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.
இந்த மரணம் சம்பந்தமான தீர்ப்பு இன்று வழங்கப்பட்டுள்ளது. இந்த மரணம் சம்பந்தமாக திடீர் மரண விசாரணைகளை காலி கராப்பிட்டிய திடீர் மரண பரிசோதகர் மருத்துவர் பீ.ஜீ.என். கருணாதிலக்க மேற்கொண்டிருந்ததுடன் உடற் கூறுகள் தொடர்பில் நடத்திய மேலதிக பரிசோதனைகள் தொடர்பான முடிவை இன்று அறிவித்துள்ளார்.
நீர்கொழும்பு கிம்புலாப்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 25 வயதான யுவதியே இவ்வாறு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.
இந்த யுவதி தனது இரட்டை சகோதரியுடன் கடந்த ஜனவரி மாதம் களுவெல்ல ஸ்ரீ இருதய கன்னியர் மடத்தில் சேர்ந்துள்ளதுடன் கன்னியாஸ்திரிக்காக கல்வியை கற்று வந்துள்ளார். நேற்றிரவு 8 மணியளவில் உயிரிழந்த யுவதி இரவு உணவை சாப்பிட்டு விட்டு வெளியேறியுள்ளார்.
அவர் அவரது அறையில் இருக்காததால் அவரது சகோதரியும் மேலும் இரண்டு பேரும் இணைந்து யுவதியை தேடிச் சென்றுள்ளனர்.
அப்போது கைவிடப்பட்ட அறை ஒன்றின் சேலையின் உதவியுடன் சுருக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட நிலையில் யுவதியின் உடல் கிடைத்துள்ளது.
மரணத்திற்கு பின்னரான மரண விசாரணைகளை சட்ட வைத்திய அதிகாரி அஜித் ரத்னவீர நடத்தியுள்ளார்.
சரிசமப சீசன் 5 போட்டியாளரும், தேவயானி மகளுமான இனியாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்... போட்டோஸ் இதோ Cineulagam
பராசக்திக்கு வெளிநாட்டில் குவியும் வசூல்.. எவ்வளவு தெரியுமா? அமரன் படத்தை விட அதிகம் தான் Cineulagam