கோவிட் சமூகத்திலிருந்து பரவியமைக்கு சான்றுகள் இல்லை! - விசேட மருத்துவ நிபுணர்
இலங்கையில் கோவிட் வைரஸ் சமூகத்திற்குள் பரவியுள்ளது என கூறுவதற்கான சான்றுகள் இன்னும் இல்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளரும் சுகாதார அமைச்சின் ஊடகப் பேச்சாளருமான விசேட மருத்துவ நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
கோவிட் சமூகத்திற்குள் பரவியுள்ளது என்ற வார்த்தையை பயன்படுத்த இதுவரை சான்றுகள் இல்லை. தொற்று ஏற்பட்டமைக்கான மூலத்தை கண்டறிய முடியாத சிறியளவிலான தொற்றாளர்களே சமூகத்தில் அடையாளம் காணப்படுகின்றனர்.
எவ்வாறாயினும் காணப்படும் நிலைமையில் அடிப்படையில், நோய் பரவல் மற்றும் இரட்டிப்பாகும் வேகத்தின்படி 100 நாட்கள் என்ற காலத்தில் இலங்கையில் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை ஒரு மில்லியனாக அதிகரிக்கக் கூடும் எனவும் ஹேமாந்த ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

வெளிநாட்டு மாணவர்களுக்கு உணவு கிடையாது: உணவு வங்கிகளின் முடிவால் தவிக்கும் சர்வதேச மாணவர்கள் News Lankasri
